follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதொல்பொருளியல் நிதியமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

தொல்பொருளியல் நிதியமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Published on

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சில நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்துரையாடபட்டது.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தலைமையில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடபட்டது.

இதன்போது, குறுந்தூர் விகாரை தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் மேற்கொண்ட தலையீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தற்பொழுது இலங்கையில் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ள இடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக, மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் இந்தத் தொழிபொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், தொழிபொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களாக அடையாளம் காணப்பட்டு தற்பொழுது அழிந்து போயுள்ள அல்லது அழிந்து போகக்கூடிய இடங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, தொழிபொருளியல் இடங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத இடங்கள் மற்றும் அழிந்துள்ள மற்றும் அழிந்து போகும் அவதானம் கொண்ட இடங்களை மாவட்ட ரீதியாக குழுவுக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர பரிந்துரைத்தார்.

மேலும், தொல்பொருளியல் நிதியமொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...