follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபா. உறுப்பினர்களின் ஊடாக பியர் உரிமம் விநியோகிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை

பா. உறுப்பினர்களின் ஊடாக பியர் உரிமம் விநியோகிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை

Published on

புகையிலை மற்றும் மதுபானங்களின் விலைகளை அதிகரிப்பதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்த போதிலும் அரசாங்கம் தனது அரசியல் ரீதியிலான நண்பர்களுக்கு முறைசாரா முறையில் மதுபான உரிமப் பத்திரம் வழங்குவதால் புகையிலை மற்றும் மது பாவனையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் இரட்டை கொள்கையை பின்பற்றி வருகின்றது

சில பிரதேசங்களில் விகாரைகளுக்கு அருகில் மதுபான கடைகளை திறக்க உரிமப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுகளுக்கு அமையவே பல பியர் உரிம பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (20) கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தில் உள்ள சிலர் கஞ்சா செய்கையை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஆவணங்களைத் தயாரித்து வருகின்றனர் என்றும், உலகின் பல நாடுகளில் ஆபத்தான மருந்துகள் என்று பெயரிடப்பட்ட சில போதைப்பொருட்களை இந்நாட்டில் ஊக்குவிக்கப் போவதில் நாட்டின் கலாசாரம் மற்றும் ஒழுக்கவியலிலும் பாதிப்பைச் செலுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த போதைப்பொருட்கள் ஏலவே சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் அரசாங்கம் என்ற வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை கஞ்சா மற்றும் மதுபானம் மூலம் தான் மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறீர்களா என கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்களுக்கு சரியான வரி விதிக்கப்படுவதில்லை என்றும், இதனை நிரூபிக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான நடைமுறையில் இருக்கும் காலாவதியான சட்டங்களை மாற்றி குறித்த சட்ட விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும், கிராமத்தை கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்பவும்,நகரத்தை கட்டியெழுப்பி நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பியர் உரிமம் விநியோகிப்பதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...