follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு“ஒரு நாடு, ஒரே சட்டம்” செயலணியை இரத்து செய்யுமாறு கோரிக்கை

“ஒரு நாடு, ஒரே சட்டம்” செயலணியை இரத்து செய்யுமாறு கோரிக்கை

Published on

“ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படாமல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால், “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற நோக்கத்தை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அற்றுப் போயுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டவரின் கடந்த காலங்களை கருத்திற்கொள்ளாமல், தமிழ், இந்து, கத்தோலிக்க, கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்காது, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

செயலணியின் தலைவர் நியமனம், தலைவராக நியமிக்கப்பட்ட நபரின் கடந்த கால பதிவுகளை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்டமை குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை கொள்வதாக தெரிவித்துள்ளது.

சட்டத்தின் முன்பாக, சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு...