follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP1மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பிரான்சுடன் பேச்சுவார்த்தை

மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பிரான்சுடன் பேச்சுவார்த்தை

Published on

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கும் நோக்கில் பிரான்ஸ் அரசாங்கம் உட்பட பல தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல்களுக்கு இலங்கை அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை மதிய உணவை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதுவரை கலந்துரையாடப்பட்ட தரப்புகளிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும், இத்திட்டத்தை தொடர தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மல்லாவி நடுநிலைப் பாடசாலையில் நேற்று (10) இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு தாய்நாடு ‘இலங்கையாம்’

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய விசேட தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்ட டயானா...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என...

அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை

சுமார் 18 சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க நிர்வாக அதிகாரிகள் சட்டப்படி வேலை செய்வதற்கான தொழில்முறை நடவடிக்கையை நேற்று (மே...