இந்தியா – கனடா வெளியுறவு தொடர்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நாடு இந்தியாவிற்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவுறுத்ததல் கனடா, தனது தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்த சில மணி நேரங்களில் வெளியாகியுள்ளது.
காலிஸ்தான் பிரிவனைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.
தங்கள் நாட்டினருக்காக வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், “இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.