follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஏனோ தானோ அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

ஏனோ தானோ அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

Published on

பௌத்தத்தை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்ததாகவும், புத்த பகவான் கூட பிரார்த்தனை செய்ய வேண்டியவர்களுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று போதித்ததாகவும், ஆனால் தற்போதைய ஜனாதிபதி பிரார்தனை செய்ய வேண்டியவர்களுக்கு பிரார்த்தனை செய்யாமல் கீழ்மட்டப் பிரிவினரின் ஆணையைப் பெற்றுள்ளதாகவும், ஐ.எம்.எப் உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வருவாய் இலக்குகளை நிறைவு செய்ய முடியாததால், இரண்டாவது ஐ. எம். எப். கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், ஏனோ தானே அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும், ஆட்சியாளர்கள் சொர்க்கபுரியில் உள்ளனர் என்றும், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் திட்டம் பற்றி பேசும் முன், 2022 வரவு செலவுத் திட்ட முன்பொழிவில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும், இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்ட முன்மொழிவில் பாரியளவிலான விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று (13) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் வாழ்க்கைச் செலவை 7000 இலிருந்து 17000 ஆக அதிகரிப்பதற்கான முன்மொழிவு வரவு செலவுத் திட்ட பிரேரணையில் இருந்த போதிலும், அது 7500 முதல் 10000 வரை இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவு செலவுத் திட்ட உரையின் சில அம்சங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாராளுமன்றத்தின் கௌரவத்துக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது எனவும், இது நாட்டு மக்களை ஏமாற்றும் ஊடக நிகழ்ச்சி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் சுப நேரத்தில் உரையாற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையின்படி ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும் நாட்டு மக்களுக்கு நரகத்தையும் இந்த வரவுசெலவு திட்டம் காட்டியுள்ளதாவும், ஏப்ரல் மாதம் தொடக்கம் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதால் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், போலி வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்து பௌத்தத்தை கேவலப்படுத்தி மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

LIRNEasia கணக்கெடுப்பின்படி 30 இலட்சத்தில் இருந்து 70 இலட்சமாக வறுமையானது 40 இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும், அஸ்வெசும கூட அறிவியலற்ற வேலைத்திட்டம் எனவும், இது ஒரு அரசியல் சூது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

தனது உரையின் மூலம் இந்த வரவு செலவுத் திட்ட உரைக்கு தெளிவான மாற்று வழிகளை முன் வைப்பதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...