follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதற்போது மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்றது

தற்போது மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்றது

Published on

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின் மூலம் மின்சார சபையின் டிசம்பர் மாத நிதி அறிக்கையின் பிரகாரம் ஓரளவு செயற்பாட்டு இலாபம் கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

மின்சார சபையின் மறுசீரமைப்பு என்பது நாட்டில் நீண்டகாலமாக கருத்தாடலுக்குட்பட்ட விடயமாகும். மறுசீரமைப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் அளித்ததுடன் புதிய மின்சார சட்ட மூலத்திற்கும் அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய மின்சார சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மகாவலி, லக்ஷபான, சமனலவெவ ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கீழ் இயங்குவதோடு, நொரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை ஒரு நிறுவனமாகவும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரிமாற்றுப் பணிகளை ஒரு தனி நிறுவனமாகவும், பிரதான கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை 100% அரசாங்கத்தின் கீழ் பேணவும் முன்மொழியப்பட்டுள்ளது. 04 விநியோக வலயங்களை 04 நிறுவனங்களாக மாற்றி அவற்றை செயற் திறன்மிக்க வகையில் செயற்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதன் மூலம் செயல்திறன், தரம் மற்றும் வீன் விரயத்தைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலகின் பிற நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்றது. நீர்மின் நிலையப் பகுதிகளில் மழை பெய்துவருகின்றது. ஆனால் தற்போதுள்ள மழைவீழ்ச்சி காரணமாக மின்சார சபை இன்னும் இலாபகரமான நிலையை அடையவில்லை. டிசம்பர் மாதத்திற்குள் மின்சார சபையின் நிதிக் கணக்கீடு மூலம் செயல்பாட்டு இலாபம் கிடைத்தால்அதன் பலன் ஏப்ரல் மாத்த்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும்.

மேலும், மின் துண்டிக்கப்ட்ட பின்னர் மீண்டும் அதனை இணைப்பதற்கான கட்டணத்தை திருத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 3000 ரூபாவாக இருக்கும் மீள் இணைப்புக் கட்டணத்தை 1000 – 2000 ரூபா வரை திருத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...