இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 49 பேருக்கு இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
79 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் நாடாளுமன்ற செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரையில் இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 141 ஆகும்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு சீர்குலைந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த எம்.பி.க்கள் குழுவிற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, எதேச்சதிகார மோடி அரசாங்கம் ஜனநாயக நெறிமுறைகளை குப்பையில் போடுவதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றது.