அமெரிக்கா முன்மொழிந்த தீர்வை வரிகளைக் குறைப்பதற்காக இலங்கை பிரதிநிதிகள் இன்று(18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் நிகழ்நிலையூடாக கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் குறித்த அரசு அதிகாரிகளுக்கு இடையில் ஓன்லைன் முறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய வரிக் கொள்கையை உலகெங்கிலும் உள்ள நாடுகள் கடுமையாக எதிர்த்ததுடன், இந்த வரி நீக்கப்படாவிட்டால் வலுவான எதிர் நடவடிக்கைகளை எடுப்பதாக சீனா கூறியது.
ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஒன்றாக எதிர்ப்பதாக கூறியிருந்தது.
இலங்கை அரசாங்கம் உடனடியாக அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, இதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தங்களை எட்ட நடவடிக்கை எடுத்தது.
இலங்கை இது குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி, அமெரிக்கா இலங்கை மீதான வரியை 30% ஆகக் குறைத்து, புதிய வரி முன்மொழிவை எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.
எனினும் அந்த 30% மேலும் குறைக்க அமெரிக்க வர்த்தக நிறுவனத்துடன் இலங்கை தொடர்ந்து கலந்துரையாடலை நடத்த முடிவு செய்தது.
அதன்படி, நிதி அமைச்சு செயலாளரின் தலைமையில், குறித்த அதிகாரிகளின் பங்கேற்புடன், ஒன்லைன் முறையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடல்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.