follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP1தயாசிறிக்கு தடை உத்தரவு

தயாசிறிக்கு தடை உத்தரவு

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தனது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதையும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தவறான பரிந்துரைகளை வழங்குவதையும் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் செயலாளர் நாயகம் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

லொகோமோட்டிவ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (6) நள்ளிரவு முதல் வேலை...

மின்சார சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மின்சார சட்டமூலம் தொடர்பில் வாக்கெடுப்பில் 44 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக...

நாளை மூடப்படும் பாடசாலைகள் குறித்து அறிவித்தல்

தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை...