தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து பிரிவின் பிரதான மதகுரு திப்பட்டுவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் வரக்காகொட அஸ்கிரிய பீடாதிபதி ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவர்களிடம் விளக்கமளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் படையின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் கே.டி. லால்காந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.