follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடு"தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்"

“தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்”

Published on

எதிர்வரும் காலங்களின் தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அபே ஜனபலவேகயா கட்சியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டான் ப்ரியசாத் தெரிவித்திருந்தார்.

இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் இழப்பிற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை அரசியல் கட்சிக்கு கொண்டுவந்தவர் அவர். நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யுக்திய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனை சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

யுக்திய நடவடிக்கை உண்மையிலேயே நல்லதொரு விடயம். யுக்திய நடைமுறையில் பொய் பிரச்சரங்க்களை முன்னெடுக்க வேண்டாம். போதைப்பொருட்களுடன் தொடர்புடையோருக்கு ஆஜராக வேண்டாம் என்றும் வழக்கறிஞர்களிடம் கோரிக் கொள்கிறேன்.

ரதன தேரர் மட்டுமல்ல, மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கொள்வது, தேரர்கள் அரசியல் நாட்டிலிருந்து முற்றாக நீக்கப்படவேண்டும். ஏனெனில் தேரர்கள் அரசியலுக்கு வருவதுடன் சாசனம் இழிவுக்குட்பட்படுத்தப்படுகின்றது. இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும். விஷ்வா புத்தாவுக்கு பெளத்த சாசனத்தில் வழங்கப்பட்ட தண்டனையை தேர்தலில் நிற்கும் தேரர்களுக்கும் வழங்கினால், அதாவது தேரர்களின் சாசன உறுப்புரிமையினை நீக்கினால் சாசனத்தினை இழிவுபடுத்தும் நபர்கள் குறையும் என நினைவூட்டிக் கொள்கிறேன்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச்சூடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். நாராஹென்பிட்டி கிரிமன்டல...

இன்று இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும்...

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...