follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1போரில் அங்கவீனமுற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு நல்ல செய்தி

போரில் அங்கவீனமுற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு நல்ல செய்தி

Published on

யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற பொலிஸ் படைவீரர்களுக்கான சம்பள முறைமை மற்றும் 55 வயது வரை பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் இந்தக் குழு கூடிய போது, ​​இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகள் குழுவிடம், தாங்கள் சேவையில் இருந்திருந்தால் பெறக்கூடிய பதவி உயர்வு தொடர்பான பட்டத்தையும் அதற்குரிய சம்பளத்துடன் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சிறப்புப் பணி மற்றும் இடர்பாடு அடிப்படையில் வழங்கப்படும் உதவித்தொகை, சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றாத அதிகாரிகளுக்கும் வழங்கப்படுவதாக இங்கு தகவல் வெளியாகியுள்ளது.

தவறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை வழங்குமாறு துறைசார் கண்காணிப்புக் குழு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அங்கவீனமுற்ற பொலிஸ் படைவீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலிஸ் வைத்தியசாலையில் தனியான சாளரத்தை திறக்குமாறு, செயற்குழுவின் தலைவர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...