follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1ஜனாதிபதியை சந்தித்த காரணத்தை போட்டுடைத்த பொன்சேகா

ஜனாதிபதியை சந்தித்த காரணத்தை போட்டுடைத்த பொன்சேகா

Published on

நிதியமைச்சு தொடர்பில் பேசுவதற்காகவே ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்ததாகவும் அரசியல் தொடர்பில் எதுவும் அங்கு பேசப்படவில்லை எனவும் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நேற்று (09) மாத்தறையில் தெரிவித்தார்.

“மக்கள் புரட்சி” எனும் கட்சி சார்பற்ற எதிர்ப்புப் பிரச்சாரத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாத்தறை பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“நிதி அமைச்சு தொடர்பான விடயம் தொடர்பில் பேசுவதற்காகவே நான் ஜனாதிபதியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன்.ஜனாதிபதியையும் இந்த நாட்டின் எந்தவொரு பிரஜையையும் சந்திக்க எனக்கு உரிமை உண்டு. அவர் நிதியமைச்சர். நான் அமைச்சுக்கு செல்லவில்லை. அவரை வெளியே சந்தித்தேன்.

பின்வாசலால் சென்று சந்திக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவரின் ஒழுக்காற்று விசாரணை உரையை கேட்டேன். எனது பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எப்போதும் எது சரியோ அதையே முன்னிறுத்துபவர் நான். குடிமக்கள் விரும்புவதைக் கொண்டு கட்சியில் பணியாற்றுங்கள், நாட்டுக்கு நல்லது, கட்சிக்கு வெளியே சரியானவற்றிற்காக கட்சி சார்பற்ற உழைப்பை நான் வழங்குவேன்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16)...

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின்...

சாமரவின் பிணை இரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...