follow the truth

follow the truth

May, 25, 2025
HomeTOP2மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும்

மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும்

Published on

ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை 02 தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திரா தெரிவித்தார்.

இரண்டு ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்கள் கூட்டாக அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.

அந்நிறுவனங்களின் நிர்வாகத்துடன் பல தடவைகள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்கள் பலனளித்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்து இலாபத்தில் ஒரு பகுதியை இலங்கை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

அம்பிடியே சுமன ரதன தேரருக்கு பிணை

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை...