follow the truth

follow the truth

June, 7, 2024
HomeTOP2உத்திக பிரேமரத்ன தேசிய மக்கள் சக்திக்கு.?

உத்திக பிரேமரத்ன தேசிய மக்கள் சக்திக்கு.?

Published on

மீண்டும் போராட்ட அரசியலில் இணையவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த நாட்டில் தற்போது நிலவும் முறைமையை மாற்றுவதற்கு புதிய தலைமுறை தலைமைத்துவம் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வேலையற்ற குழுவுடன் தலைமைத்துவம் முன்னோக்கி செல்ல வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே கட்டமைப்பின் கீழ் தற்போதுள்ள அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பது உத்திகவின் கருத்து.

இலங்கையில் தனது சொந்த அரசியல் கருத்தை நிலைநாட்டக் கூடிய ஒரு குழுவுடன் அரசியலில் ஈடுபடுவதே தனது நம்பிக்கை என்றும் உத்திக பிரேமரத்ன தெரிவித்தார்.

கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் ஓராண்டு காலம் தங்கி வேலை செய்து விட்டு நாடு திரும்புவதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் இராஜினாமா கடிதம் கனடாவில் இருந்தே சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அரசியல் காரணமாக தனது கலைத்துறையை இழந்ததாகவும் உத்திக பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கவே பிரதமர் பதவியையும் தான் கேட்டதாக அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக இவ்வருட நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாகவும், ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படுவதே தனது நோக்கமல்ல எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஆடுகளம் சரியில்லை.. துடுப்பாட்டத்தில் சிக்கல் நிலை..

அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை உள்ளிட்ட அணிகள் பெற்றுள்ள நிலைப்பாடுகள் நல்ல நிலையில் இல்லை...

ரணிலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை...

55ற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

மேல் மாகாணத்தில் கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக...