follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடுபல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிப்பு

பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரிப்பு

Published on

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனால் அவதானத்துடன் செயல்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் நாளையும் அவதானத்திற்குரிய மட்டத்தில் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வீட்டில் வைத்து கவனித்துக் கொள்ளுமாறும், சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...