follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1காஸா சிறுவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கும் இலங்கை

காஸா சிறுவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கும் இலங்கை

Published on

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கான காசோலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹேர் ஹம்தல்லாஹ் ஸைதிடம் (Dr. Zuhair Hamdallah Zaid ) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு பெருமளவிலான நன்கொடையாளர்கள் ஏற்கனவே நிதியுதவி அளித்திருந்தனர்.

அத்துடன், இவ்வருடம் இப்தார் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முதற்கட்டமாக காஸா சிறுவர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அத்துடன், “காஸா சிறுவர் நிதியத்திற்கு” (Children of Gaza Fund) பங்களிக்குமாறு நன்கொடையாளர்களிடம் ஜனாதிபதி அலுவலகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி கிடைத்துள்ளதுடன், அந்த நிதி எதிர்வரும் நாட்களில் பலஸ்தீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...