follow the truth

follow the truth

May, 23, 2025
HomeTOP2ரணிலுக்கு எதிர்ப்பு.. ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நாமல்

ரணிலுக்கு எதிர்ப்பு.. ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நாமல்

Published on

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதற்கு கட்சியின் இளைஞர் முன்னணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் இருந்து இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள் விலகுவார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு அந்த அமைப்புகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கட்சியின் இளைஞர் அமைப்புகளின் கோரிக்கைகள் நாமல் ராஜபக்ஷவிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதற்கட்டமாக தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்ஷவிடம் வழங்க பசில் ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

அம்பிடியே சுமன ரதன தேரருக்கு பிணை

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...