follow the truth

follow the truth

May, 23, 2025
HomeTOP2அநுரவுடன் இணைய டலஸ் விருப்பமாம்

அநுரவுடன் இணைய டலஸ் விருப்பமாம்

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்தில் இணைந்து போராட்டத்தின் போது எதிர்க்கட்சியில் இணைந்து விட்டு வெளியேறிய டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் இணைய முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுடன் இது தொடர்பான பல கலந்துரையாடல்கள் இரகசிய மட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.

டலஸ் அழகப்பெருமவுக்கு மேலதிகமாக, சுதந்திர மக்கள் பேரவையின் உறுப்பினர்களான சரித ஹேரத் மற்றும் குணபால ரத்தனசேகர ஆகியோரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும் இந்த குழுவை தேசிய மக்கள் சக்தியில் இணைக்க ஜேவிபி கட்சி தயக்கம் காட்டி வருவதாகவும், ஆனால் தேசிய மக்கள் கட்சி கட்சி எந்தவித தயக்கத்தையும் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதும் கூட சுதந்திர ஜனதா சபையின் குழு ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதுடன், பதவி தொடர்பான பிரச்சினை காரணமாக டலஸ் அழகப்பெரும கட்சியில் இணைவதற்காக நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு ஜூன் 17 பரிசீலனைக்கு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற...

ஹஜ், உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி – இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம்

விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா - பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை...