எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கட்சி உரிய தீர்மானம் எடுக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தடை விதித்துள்ளது.
இதற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது பல பிரிவுகளாக பிரிந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
அதிகமானோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்திய அதேவேளை, கட்சியிலிருந்தே வேட்பாளரை நியமிக்க வேண்டும் என மற்றொரு குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கட்சியின் அரசியலமைப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.