follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2தனிநபர் மாதாந்த செலவு குறைந்துள்ளது

தனிநபர் மாதாந்த செலவு குறைந்துள்ளது

Published on

நாட்டில் ஒரு நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணையை திணைக்களம் வெளியிட்டுள்ளது..

இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இவையே வறுமைக் கோட்டிற்குக் குறைவதற்கான முக்கியக் காரணங்கள் எனவும், கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியின் முதலாவது பேரணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம்...

இலங்கைக்கு முதன்முறையாக புத்தம் புதிய வகை பெட்ரோல்

முதன்முறையாக, இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த மே மாதம் (18) மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து...

டயானா பற்றி சிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிரஜாவுரிமை இன்றி இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக சட்டத்தின் பிரகாரம்...