follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1சட்டவிரோதமான முறையில் 112 வாகனங்கள் இறக்குமதி - பறிமுதல் செய்ய நடவடிக்கை

சட்டவிரோதமான முறையில் 112 வாகனங்கள் இறக்குமதி – பறிமுதல் செய்ய நடவடிக்கை

Published on

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்கள் பல்வேறு சட்டவிரோத முறைகள் மூலம் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான வாகனங்களை தற்போது பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த வாகனங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறும் அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

LATEST NEWS

MORE ARTICLES

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...