இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 இஞ்சி மூடைகளை தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரமாக உள்ள வீடொன்றின் பின்புறம் இருந்து 60 மூடைகளில் சுமார் 2 தொன் எடை கொண்ட இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், முதல் கட்ட விசாரணையில் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சியின் இந்திய மதிப்பு சுமார் 3 இலட்சம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போது கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.