follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1இலங்கையும் டிஜிட்டல் மயமாக்கலுடன் முன்னேற வேண்டும்

இலங்கையும் டிஜிட்டல் மயமாக்கலுடன் முன்னேற வேண்டும்

Published on

இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk/ இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

Public Learn என்பது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து இலவச பாடநெறிகளை பயனர்களை வழிநடத்தும் ஒரு தளமாகும். இந்த தளமானது ரீஜண்ட் குளோபல் நிறுவனத்தால் (Regent Global) இயக்கப்படுவதோடு இலங்கையில் இதனை அறிமுகப்படுத்த இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இளைஞர் சமூகத்தினருக்கான பொது கற்றல் தளத்தை (http://www.publiclearn.lk/) ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பொருளாதார மாற்றத்திற்காக இலங்கை டிஜிட்டல் மயமாக்கலுடன் வேகமாக முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் வகுப்பறைகள் மற்றும் சுவர்கள் இன்றி பாடசாலைக்கு வெளியிலான கற்றல் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வறான திட்டமே இன்று தொடங்குகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வகுப்பறைகளில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை சவாலை சமாளிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்த வேலைத்திட்டம் இலங்கை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும், நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் எனக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும்.

தற்போது கல்வியின் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளோம். அதாவது கல்வி முறையை டிஜிட்டல் மயமாக்கி அறிவை திறந்த தளத்தில் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியுள்ளோம். அங்கு நவீன அறிவை பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அறிவைப் பயன்படுத்துவதன் மூலமே நாடு முன்னேற முடியும்.

21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரம் என்ன என்பதை பாராளுமன்றத்தில் உள்ள சிலர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கும் சில வகுப்புகளை நடத்தலாம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...