follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2கள்வர்களுடன் அம்மனமாக ஆட வேண்டாம் - எஸ்.எம்.மரிக்கார்

கள்வர்களுடன் அம்மனமாக ஆட வேண்டாம் – எஸ்.எம்.மரிக்கார்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதான் உண்மையும் கூட என்றாலும் அவர் குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது.

“.. கொவிட் காலத்தில் ஜனாசாக்களை எரித்தது நீதிமன்ற உத்தரவின் பேரில் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலையில் தெரிவித்திருந்தார். இது ஒரு பச்சப் பொய், நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிடவில்லை. அது கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் முஸ்லிம்களை பழிவாங்க உலக சுகாதார அமைப்பின் எவ்வித யோசனைகளும் அறிவுறுத்தல்களும் இன்றி தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட பொய்யான ஒரு குழுவின் தீர்மானம் ஆகும்.

ஏனெனில் 2019ம் ஆண்டும் வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்டதொன்றாகும். ஜனாதிபதி அவர்களே கள்வர்களுடன் நீங்கள் இருங்கள் ஆனால் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்க வேண்டாம்.

நீரினூடாக கொவிட் பரவுகிறது என்றெல்லாம் கதை பரப்பப்பட்டது. நான் அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தொலைபேசி ஊடாக கதைத்தேன். அப்போது கேட்டேன், நீரினூடாக கொவிட் பரவினால் கொவிட் தொற்றாளர்கள் எல்லாம் ஐடிஎச் வைத்தியசாலையில் ஏன் அனுமதிக்கிறீர்கள். அங்குள்ள நீரினூடாக முழு கொலன்னாவ இற்கும்  கொவிட் பரவுமே எனக் கேட்டேன்.. அப்போது மஹிந்த ராஜபக்ஷ கொஞ்சம் இருங்கள் இருங்கள் என்றார்.. பின்னர் இம்ரான்கான் இலங்கை வந்தபோது நாம் ஆர்ப்பாட்டம் செய்தோம் அதற்குப் பின்னரே பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி தருவதாக தெரிவித்தார். அது விஞ்ஞான பூர்வ தீர்மானம் என்றால் நீதிமன்ற தீர்மானம் என்றால் எப்படி மஹிந்த ராஜபக்ஷ அடக்கம் செய்ய உடனே அனுமதி தந்தார்? எனவே, ஜனாதிபதி அவர்களே கள்வர்களுடன் அம்மனமாக ஆட வேண்டாம்.. ஜனாதிபதி இனவாதி அல்ல, அது உண்மை.. கள்வர்களை காப்பாற்ற இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்குக்...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...