follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பாராளுமன்றில் நாளை ஜனாதிபதி விசேட உரை

பாராளுமன்றில் நாளை ஜனாதிபதி விசேட உரை

Published on

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக நாளைமறுதினம் (03) பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவருவதற்கு, இதன் காரணமாக அன்றையதினம் பாராளுமன்ற அமர்வை முன்னெடுக்காதிருப்பதற்கும் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும்-எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கு அமைய அவருடைய பூதவுடல் நாளைமறுதினம் (03) பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாளையதினம் (02) ஜனாதிபதியின் விசேட உரையை மாத்திரம் முன்வைப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இத்தீர்மானத்திற்கு அமைய அமைய நாளை (02) மற்றும் நாளைமறுதினம் (03) நடைபெறவிருந்த இது தொடர்பான தீர்மானம் குறித்த விவாதம் நடைபெறாது.

இன்று (01) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவை பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...