follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

Published on

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸின் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று(15) வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்குவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதியானது, மார்சேயில் தொடங்கி பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் வழியாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய ஊர்வலம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இலங்கையிலிருந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றடைந்த தர்ஷன் செல்வராஜா, பரிஸ் நகரில் கடந்த வருடம் பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றவர் ஆவார்.

அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன், சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பரிஸில் கடந்த வருடம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...