follow the truth

follow the truth

July, 4, 2025
Homeவிளையாட்டுசிறப்பு கண்ணாடி அணியாமல் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்ற 51 வயது வீரர்

சிறப்பு கண்ணாடி அணியாமல் வெள்ளி பதக்கத்தை தட்டி சென்ற 51 வயது வீரர்

Published on

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் – செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

51 வயதான யூசுப், துல்லியமான பார்க்கக்கூடிய கண் கண்ணாடி மற்றும் சத்தம் கேட்காமல் இருக்க கூடிய கருவிகள் எதுவும் அணியாமல் போட்டியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

சாதாரணமான கண்ணாடியை அணிந்து கொண்டு ஒரு கையை பாக்கெட்டில் வைத்து கொண்டு பல வீரர்களை தோற்கடித்து வெள்ளி பதக்கத்தை அவர் வென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கண்கள் கூசாமல் இருப்பதற்கும் ஒரு கண்ணின் பார்வையை தடுக்கும் விதமாகவும் துல்லியமான சிறப்பு கண்ணாடிகளை அணிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி...

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி, இன்று...