follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

Published on

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண மக்கள் நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அந்த மாகாணத்தில் பாரிய பொருளாதார திறன் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த சந்தர்ப்பங்களைப் வடக்கு மாகாணம் உட்பட முழு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் இன்று (02) நடைபெற்ற யாழ்.மாவட்ட கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.

தேர்தல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற கடன் பெற்றதாலேயே நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதே தவறை மீண்டும் நடக்க அனுமதிக்காமல் புதிய பொருளாதார மற்றும் அரசியல் முறையில் முன்னேறிச் செல்வதற்கு பங்களிப்பது நாட்டிலுள்ள அனைத்து கல்வியியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஏனையவர்களின் பொறுப்பாகும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்களுக்கும் முதன்மை இடம் கிடைத்தாலும், அனைவரையும் சமமாக நடத்துதல், மற்றும் பாலினச் சமத்துவம் உள்ளிட்ட விடயங்களை இதன்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், தமிழ் மொழியையும் சிங்கள மொழியையும் ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் தமிழ் நாட்டில் ஏற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியுடன், மற்றவர்களுக்கு இல்லாத வாய்ப்புகள் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

சிங்கள, தமிழ் இனப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். பெரும்பான்மையான சிங்கள, பௌத்த மக்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும், அனைவரையும் சமமாக நடத்துவது மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் இன மற்றும் மத குழுக்களிடையே சமத்துவம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் இடையே சமத்துவம் உள்ளது.

நாட்டில் ஒருபாதியாக இருக்கும் பெண்களுக்கு பாராளுமன்றத்தில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இதற்கு நாம் தீர்வு காண வேண்டும். சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழகத்தில் ஏற்படப்போகும் பொருளாதார வளர்ச்சியால் தமிழ் பேசும் இலங்கையர்களுக்கு மற்றவர்களுக்கு கிடைக்காத வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் ஒன்றாக அபிவிருத்தி செய்ய வேண்டும். நான் அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் இருந்த போதிலும் பின்னர் அது பின்தங்கிப் போனது. இப்போது போர் முடிந்துவிட்டது. எனவே யாழ்ப்பாணத்தையும் வடமாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவற்றில் யாழ்ப்பாணம் பெரும் திறனை கொண்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்து நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

யாழ்ப்பாணம் மற்றும் வடமாகாண மக்கள் நீண்டகாலமாக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். ஆனால், இந்த மாகாணத்தில் நாம் பயன்படுத்த வேண்டிய பாரிய வளங்கள் உள்ளன. பழைய முறையில் முன்னேறிச் செல்ல முடியாது. நல்ல எதிர்காலத்திற்காக தற்போதுள்ள முறைமை மாற்றப்பட வேண்டும். அதற்கு பங்களிப்பை வழங்குவது, மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் என்ற வகையில் நீங்கள் முன்னோடியாவிருந்து பங்களிப்பை வழங்க வேண்டும்.

புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 2022 ஆம் ஆண்டில் நாங்கள் எதிர்கொண்ட சிரமங்கள் கடுமையானவை. இருந்தாலும், நாம் அதை உறுதியுடன் எதிர்கொண்டோம். நமது நாட்டை முன்னேற்றும் சவாலை வெல்வோம். அனைவரும் ஒன்றுபட்டு புதிய பயணத்தை தொடர்வோம் என்று அழைப்பு விடுக்கிறேன்.” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...