follow the truth

follow the truth

May, 15, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபெயரில் ராஜபக்ச உள்ளமையால் நான் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல

பெயரில் ராஜபக்ச உள்ளமையால் நான் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல

Published on

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ச கோண்டாவில் பகுதியில் BCS மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டார்.

பெரமுன கட்சியினர் என்னை தமது கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுகி இருந்ததாகவும் அதனை தான் நிராகரித்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்சதெரிவித்துள்ளார்.

தற்போது இளம் அரசியல்வாதியொருவரை வேட்பளாராக களம் இறக்கியுள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடுவதே எனது இலக்கு.

எனது பெயரிலும் ராஜபக்ச உள்ளமையால் நான் முந்தைய அரசாங்கத்தின் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. அந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்துடன் தொடர்புடையவராகவே என்னை தெரியும். ஆனால் நான் நீதியமைச்சராக சுயாதீனமாகவே இயங்கினேன்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கையிழந்துள்ளமையை நான் அறிவேன். அதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போது நாடாளுமன்ற இருக்கின்றவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...