follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2எனக்கு வாக்களித்தால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்..- TNA இற்கு தெரிவிப்பு

எனக்கு வாக்களித்தால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்..- TNA இற்கு தெரிவிப்பு

Published on

தாம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் கட்சி பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ் கட்சி சார்ந்த பிரதிநிதிகள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் வைத்து சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாகாண சபை முறைமையை பயன்படுத்தி அந்த மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்க எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட படையணியை அமைத்து தனது நேரடிக் கண்காணிப்பில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிக்குமாறு சஜித் பிரேமதாச கோரிய போதிலும் கலந்துகொண்ட தமிழ் கட்சி பிரதிநிதிகள் தமது கோரிக்கை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...