follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2"மொட்டுக்கு இப்போது வால் மட்டும் தான் மிச்சம்" - டில்வின்

“மொட்டுக்கு இப்போது வால் மட்டும் தான் மிச்சம்” – டில்வின்

Published on

ஆட்சியாளர்கள் நீண்ட காலமாக தேர்தலுக்காக காத்திருந்தாலும், இந்த நாட்டின் பொது மக்கள் ஜனாதிபதித் தேர்தல் நாளுக்காகக் காத்திருக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்த்த தேர்தல் திகதி செப்டெம்பர் 21ஆம் திகதி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த டில்வின் சில்வா;

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மக்கள் அதிகூடிய வாக்குகளை வழங்கி தோழர் அநுரவை வெற்றி பெற வைப்பார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம். இம்முறை ஜனாதிபதித் தேர்தல் விசித்திரமானது. ஒரு பக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. அந்தப் பக்கத்தின் முகங்கள் மக்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி. மறுபக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மொட்டுக்கு இப்போது வால் மட்டும் தன் மிச்சம்…. ரணிலிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கோட்டாபயவுக்கு வாக்களியுங்கள் என்று ரணிலையே ஜனாதிபதியாக்கிய குட்டித் திருடர்கள் மறுபக்கம். ரணிலிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வந்த பெரியவர்கள் இப்போது ரணிலுடன் இருக்கிறார்கள். ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுக்க எங்களுக்கு பைத்தியமா என்று கேட்டவர்கள் இப்போது ரணிலுடன் இருக்கிறார்கள். மத்திய வங்கியை உடைத்த ரணிலை சிறையில் அடைக்கும் வரை தூங்க மாட்டேன் என்று கூறிய மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது ரணிலுடன் இருக்கிறார். ரணில் திருடன் என்று சொன்ன தினேஷ் குணவர்த்தனவும் இன்று ஒரு பக்கம் தலைவர்களும் திருடர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

வீழ்ந்த நாட்டை மீட்பது நமது கடமைகளில் ஒன்றாகும். மற்றைய பொறுப்பு அந்த நாட்டை கட்டியெழுப்புவது. மற்றொன்று, உலக நாடுகளின் அவமானத்திலிருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவது. ‘செல்வம் நிறைந்த நாடு அழகான வாழ்க்கை’ என்பது நமது முழக்கம்.

இதுவரை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் மனிதாபிமானமும் கருணையும் இல்லாத நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். எனவே குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்புடனும், பாதுகாப்புடனும் வாழும் நாட்டை அனைவரும் உருவாக்குவோம். இப்போது திசைகாட்டி மற்றொரு அரசியல் இயக்கம் அல்ல; மக்களின் பெரும் சக்தி; மக்கள் இயக்கம். முழு நாட்டையும் மறுமலர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் மாபெரும் கடல் போன்ற அரசியல் சக்தி. எமக்கு எதிராக ரணில்லா, சஜித்லா, ராஜபக்ச அவதூறுகள், பொய்கள், பிரசாரங்கள் செய்தாலும் தேசிய மக்கள் சக்தியை மாற்ற முடியாது. இது வெற்றி வரை தொடரும். நாம் அனைவரும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்…” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...