follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுதவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கை – மத்திய வங்கி

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கை – மத்திய வங்கி

Published on

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது

மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாத நடவடிக்கைகளில் சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் ஈடுபடுகின்றமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் தொடர்ச்சியான திடீர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றது. இதன்மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பலப்படுத்தப்படும்.

2021 நவம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது, பின்வரும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தொடர்பான பணிப்புரைகளுடன் இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. நியூ நராஷா (பிறைவெட்) லிமிடெட் (New Natasha (Pvt) Ltd.), இல. 12, சூப்பர் மாக்கெற் கொம்பிளெக்ஸ், வென்னப்புவ
2. ஜோர்ச் மைக்கல் ஹோல்டிங்ஸ் (பிறைவெட்) லிமிடெட் (George Michael Holdings (Pvt) Ltd.), இல. 157, சிலாபம் வீதி, வென்னப்புவ
3. றோயல் மணி எக்ஸ்சேஞ்ச் (பிறைவெட்) லிமிடெட் (Royal Money Exchange (Pvt) Ltd.), இல. 55 காலி வீதி, கொழும்பு 06
4. பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிறைவெட்) லிமிடெட் (Prasanna Money Exchange (Pvt) Ltd.) இல. 57 காலி வீதி, கொழும்பு 06

தவறிழைக்கும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் அறிவித்தலின் மூலம் தொடர்பூட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய தவறும் சந்தர்ப்பத்தில், அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.

அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களுக்கு வங்கிகளால் வழங்கப்பட்ட வீதங்களை விட உயர்ந்த வீதங்களிற்கு வெளிநாட்டுச் செலாவணியை கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு அத்தகைய நாணயமாற்றுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் பொது மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...