follow the truth

follow the truth

August, 10, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிய முறையான வேலைத்திட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிய முறையான வேலைத்திட்டம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக இராணுவத்தினரை இணைத்து இந்த நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுக்கின்ற பயணத்தின் முன்னோடிகளாக நியமித்துக் கொள்வோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பநிலையையும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு முன்னுரிமை வழங்கிய குழுவையும், அதன் பிரதான சூத்திரதாரியையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுப்போம்.

எமது நாட்டின் கொடிய நோயாக மாறி இருக்கின்ற போதைப்பொருள் விநியோகத்தை முற்றாக ஒழிப்பதற்கு ராணுவத்தினரின் பூரண பங்களிப்பையும் பெற்றுக் கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ சக்தி இன்று(10) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை ஒருமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து உயிரை துச்சமாக மதித்து தமது கடமைகளை முன்னெடுக்கின்ற முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், உள்ளிட்ட ராணுவத்தினரை அரசியல் காலங்களில் அரசியல் கால்பந்துகளாக நடத்தப்படுகின்றனர்.

தேர்தல் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அனாதைகளாக கைவிடப்படுகின்றனர். பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் முப்படையினரும் பொலிஸார், பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களினதும் உரிமைகள் குறித்து குரல் எழுப்பியதோடு உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டிருக்கின்றது.

அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியின் செயற்பாடாக இருக்கின்றது. 21 ஆம் திகதிக்கு அந்த செயற்பாட்டிற்கு 220 இலட்சம் மக்களின் ஆசீர்வாதத்தோடு தீர்வினையும் பதிலையும் வழங்குகின்ற காலம் ஆரம்பமாகும். 48 மணித்தியாலத்திற்குள் முப்படையினரும் பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்குவோம்.
அதன் ஊடாக குறிப்பிட்ட காலத்துக்குள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...