follow the truth

follow the truth

July, 31, 2025
HomeTOP2தனியார் தொலைக்காட்சி அலைவரிசையுடன் சஜித்துக்கு என்ன டீல்?

தனியார் தொலைக்காட்சி அலைவரிசையுடன் சஜித்துக்கு என்ன டீல்?

Published on

தான் டீல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினாலும், ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி அலைவரிசையுடன் என்ன டீல் செய்துள்ளார் என்பதை சஜித் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சவால் விடுத்துள்ளார்.

இரத்தினபுரி நகரில் தற்போது இடம்பெற்று வரும் ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அராஜகங்களுக்கு முடிவுகட்டிய ஒரேயொரு தலைவர் ரணிலே! பிரதமர் தினேஷ் அராஜகங்களுக்கு முடிவுகட்டிய ஒரேயொரு தலைவர் ரணிலே! பிரதமர் தினேஷ் ரணில் விக்ரமசிங்க

“.. எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவுசெய்யப்படுவார் என்பதை இந்த மேடையில் பகிரங்கப்படுத்துகின்றேன்.

2022 இல் நாட்டை ஏற்ற போது ஐக்கிய மக்கள் சக்தி நகைத்தனர். ஐ.எம்.எப் பேச்சுவார்த்தைகள் தோற்கும் என்றனர். கடன் கிடைக்காது என்றனர்.

6 மாதம் செல்ல முன் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றனர். ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றனர்.

தேர்தலை நடத்த மாட்டார் என்றனர். எதிரணி சொன்ன அனைத்துமே இன்று பொய்யாகியுள்ளது. இயலும் என அனைத்தையும் செய்து காட்டியுள்ளார்.

எஞ்சிய 50 வீத செயற்பாடுகளையும் நிறைவு செய்வதற்காகத் தான் அவர் ஆட்சியைக் கேட்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் அனைவருக்கும் பதவி கொடுக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

உலகத்தை மாற்றுபவர்கள் பேராசை இல்லாதோர் – லால் காந்தவுக்கு டட்லி செருப்படி

டட்லி சிறிசேன அரலிய அரிசி வணிகத்தின் நிறுவனர் ஆவார். இலங்கை சந்தையில் கல் நீக்கப்பட்ட அரிசியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய...