follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP1ஜனாதிபதி - சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி – சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில்
இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை இதன்போது சுட்டிக்காட்டிய சமந்தா பவர், மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஐக்கிய அமெரிக்க முகவர்
நிலையத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் அதேபோன்று சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான
ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இந்தச் செயற்பாடுகள் உதவும் எனவும் சமந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் மீண்டும் சேவையில்

முன்னர் சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட 600 பஸ்கள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் சேர்க்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

2 மாதங்களில் 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கடந்த 2 மாதங்களில் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு அனுமதி

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பீ. ராஜபக்ஷவின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள்...