அமெரிக்காவின் கன்சாஸ் பிராந்திய சட்டமா அதிபரினால், COVID-19 தடுப்பூசியை சந்தைப்படுத்துவது தொடர்பாக மருந்து நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில், தடுப்பூசியின் செயல்திறனைப் பற்றி நிறுவனம் தவறான கூற்றுகளை கூறியதாகவும் பக்கவிளைவுகள்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (20) இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு...
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
தென் கிழக்கு ஆசியாவில் முதல் நாடாக தாய்லாந்தில் ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மேலவையான செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒருபால் திருமணத்தை சட்டமாக்குவதற்கு 130 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக நான்கு வாக்குகளும் பதிவாகியுள்ளன....
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபாவாக சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தமானி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்...
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளை இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே பயன்படுத்துவார்கள் என...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால்...