யாழ்ப்பாணம் – சங்குப்பிட்டி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரத் திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் 3 நாட்களுக்கு குறித்த பாலத்தினூடாக பயணிப்பதற்கு கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (18) மதியம் 12 மணிமுதல் எதிர்வரும் 3 நாட்களுக்குக் குறித்த பாலத்தினூடாக கனரக வாகனங்கள் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.