follow the truth

follow the truth

December, 12, 2024
Homeவணிகம்உயர் ஷொப்பிங் அனுபவத்திற்கான பிரத்தியேக காட்சியறையை திறந்துள்ளது Fashion Bug

உயர் ஷொப்பிங் அனுபவத்திற்கான பிரத்தியேக காட்சியறையை திறந்துள்ளது Fashion Bug

Published on

இலங்கையில் மிகவும் விரும்பப்படும் பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இயங்கி வந்த அதன் பிரத்தியேகமான காட்சியறையை மேம்படுத்தி மீள்திறப்பு செய்துள்ளதாக பெருமையுடன் அறிவிக்கிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த, இந்த பிரபலமான காட்சியறையானது கொழும்பிலுள்ள பேஷன் விரும்பிகளுக்கு சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்கி வந்துள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மேம்படுத்தல்கள் மூலம், தற்போது அது மேலும் உயர்ந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்கவுள்ளது.

இந்த அற்புதமான மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், Fashion Bug இனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tinsel & Tidings கிறிஸ்மஸ் வெளியீடுகளை நவம்பர் 21ஆம் திகதி வெளியிட்டு வைத்தது. இந்த விழாவில் மிஸ் ஸ்ரீலங்கா 2024 உலக அழகி அநுதி குணசேகர, Face of Asia 2024 ஜூலியா சொனாலி உள்ளிட்ட பல்வேறு விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பேஷன் ஆர்வலர்கள், பிரபலங்கள், ஸ்டைல் தொடர்பில் செல்வாக்கு கொண்ட நபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கொண்டாட்ட நிகழ்வானது, ஒரு பிரமாண்டமான பண்டிகையாக அமைந்திருந்தது. எதிர்வரும் பண்டிக்கைக் காலத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட புத்தம் புதிய சேகரிப்புகளை முதன் முதலில் பார்வையிடவும் இங்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த காட்சிப்படுத்தல்கள், Fashion Bug நிறுவனத்தின் பண்டிக்கைக்கால ஊக்குவிப்பு பிரசாரத்துடன் ஒன்றிணைந்ததாக அமைந்திருந்தது. வருட இறுதி பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கான ஸ்டைலின் உச்சத்தை கொண்டுவருவதை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.

1994 ஆம் ஆண்டு ஏழு பேர் கொண்ட குழுவின் மூலம் நிறுவப்பட்ட Fashion Bug நிறுவனம் தற்போது வளர்ச்சியடைந்து ஒரு முன்னணி பெயராக பரிணமித்துள்ளது. இந்நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் நாடு முழுவதும் 14 காட்சியறைகளுடன் மக்களின் பேஷன் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. உலகளாவிய ஸ்டைலான போக்குகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் அதே வேளையில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட தொகுப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பிரீமியம் ஆடை விற்பனையாளராக திகழ்வதில் இன்று இவ்வர்த்தக நாமம் பெருமை கொள்கிறது.

ஷொப்பிங் செய்பவர்கள் தற்போது மேம்படுத்தப்பட்ட பிரத்தியேகமான காட்சியறைக்கு விஜயம் செய்து சிறந்த அனுபவத்தைப் பெறலாம். இக்காட்சியறையானது, நவநாகரிக வாழ்க்கை முறையை விரும்பும் ஆர்வலர்களுக்கு தடையற்ற ஷொப்பிங் அனுபவத்தையும் புதிய பாணியிலான சூழலையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய Tinsel & Tidings கிறிஸ்மஸ் தொகுப்புகள் விரைவில் நாடு முழுவதும் உள்ள Fashion Bug காட்சியறைகளில் கிடைக்கும். இவை பண்டிகையின் புதிய பேஷன் போக்குகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த பண்டிகைக் காலத்தை மேலும் சிறப்பானதாக்கும் வகையில் தமது வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான சலுகைகள் மற்றும் சேமிப்புகளை Fashion Bug அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிய Fashion Bug சமூகவலைத்தள பக்கங்களுடன் தொடர்ச்சியாக இணைந்திருங்கள்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...