follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2டிசம்பர் 10 முதல் காலநிலையில் மீண்டும் மாற்றம்

டிசம்பர் 10 முதல் காலநிலையில் மீண்டும் மாற்றம்

Published on

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...