follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை அதிகரிக்கலாம்

Published on

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழுமுக்க மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையுமென எதிர்பாரக்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைக்கு அருகாமையாக தென்மேற்கு வங்காள விரிகுடா கடலை அடைய அதிக வாய்ப்புள்ளது.

இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடகீழ் பருவ மழை நிலை படிப்படியாக நாடு முழுவதும் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. வரையான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது .

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல், வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...