follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2CCD முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

CCD முன்னாள் பணிப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Published on

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றம் இன்று(13) உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி குருவிட்ட இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வந்து தனது சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான சொத்து பலாத்காரமாக அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டு இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, உரிய விசாரணையின்றி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ திறந்த நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...