follow the truth

follow the truth

July, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரஞ்சன் மீண்டும் சிக்கலில்.. சிஐடி விசாரணை..

ரஞ்சன் மீண்டும் சிக்கலில்.. சிஐடி விசாரணை..

Published on

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு நேற்று(31) 2 மணிநேரம் விசாரணை நடத்தியது.

சிவில் செயற்பாட்டாளரான நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் அவரிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

நடிகர் ரஞ்சன் ராமநாயக்க கர்தினாலை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலான ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறும் நாமல் குமார, இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மற்றும் கர்தினால் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் குமாரவிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் மீண்டும் பொய்யான வாதங்களை முன்வைக்கும் லக்மாலி

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடான சினோபெக், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு வந்தது என்று அக்கட்சியின்...

பிள்ளையானுக்கு தப்பிக்க வழியில்லை.. பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் கருத்து

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கான விசாரணைகள் தொடரும் நிலையில், இதுகுறித்த உண்மைகள் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு,...

தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை கிழக்குக்கு அவசியம் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு,...