follow the truth

follow the truth

January, 22, 2025
Homeஉலகம்குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பானுடன் இணைந்த ரஷ்யா

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பானுடன் இணைந்த ரஷ்யா

Published on

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷ்யா இணைந்துள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இளம்பெண்கள் குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சியில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் கணிசமான ஊக்கத்தொகையை ரஷ்யா அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்திற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மாணவர்களாகவும், 25 வயதுக்குட்பட்டவர்களாகவும், கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இறந்து பிறக்கும் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊக்கத்தொகை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், திடீரென நோய் பாதிப்பு காரணமாக குழந்தை இறந்துவிட்டால் ஊக்கத்தொகை இரத்து செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலும், ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இளம் தாய்மார்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்களா என்பதை குறிப்பிடவில்லை, மேலும் குழந்தை பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்குப் பிறகான செலவுகளுக்கு உதவ கூடுதல் தொகையை பெறுவார்களா என்பதையும் குறிப்பிடவில்லை.

இதனிடையே, ரஷ்யாவின் வரலாற்றில் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 5,99,600 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த பிறப்பு எண்ணிக்கையையும், 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குறைவாகவும் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 8 பயணிகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ரயிலில் தீப்பிடித்ததாக அஞ்சி தண்டவாளத்தில் குதித்த பயணிகள் மீது மற்றொரு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம்...

தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு உயர்ந்துள்ளது

ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக, தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 2024 இல் உயர்ந்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான...

அமெரிக்காவில் மற்றொரு சக்திவாய்ந்த காட்டுத் தீ

மேற்கு அமெரிக்காவின் சான் டியாகோவின் புறநகர்ப் பகுதியில் சக்திவாய்ந்த காட்டுத் தீ பரவி வருகிறது. லிலாக் (Lilac) என்று பெயரிடப்பட்ட...