வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி நாளை(30) முதல் ஆரம்பமாகும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 13,376 ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு இந்த இழப்பீடு முதல் கட்டமாக வழங்கப்படும் எனவும் 6,234 விவசாயிகளுக்கு 166.7 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.