follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP2பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

Published on

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொது மனுக்கள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதற்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(1)இன் ஏற்பாடுகளுக்கு அமைய குழுவின் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அஜித் கிஹான் ஆகியோரினால் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமினி ரத்னாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.

இங்கு வேறொருவரினதும் பெயர் பரிந்துரைக்கப்படாமையால் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமினி ரத்னாயக்க குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதுடன், தன்னைக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அதன்படி, எதிர்காலத்தில் பொது மனுக்களைத் தாக்கல் செய்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான பொதுமனு விசாரணை செயன்முறையை விரைவுபடுத்துவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

அதேநேரம், பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும கடந்த 24ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வழிவகைகள் பற்றிய குழு முதன் முதலாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.

தலைவர் பதவிக்கு பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெருமவின் பெயரை முறையே பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் மாபலகம மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோர் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.

இங்கு உரையாற்றிய குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், குழுவின் பணிகளைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகவும், இதற்கு குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற குழு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு கடந்த 24ஆம் திகதி முதன் முதலாகக் கூடியது. இதில் அமைச்சர் கிரிஷாந்த அபேசேன அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

ஹொரணை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இன்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250ற்கும் அதிகமானோர்  விடுவிப்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும்...