follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2அதிக விலைக்கு அரிசி விற்பனை - 170 வர்த்தகர்களுக்கு அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை – 170 வர்த்தகர்களுக்கு அபராதம்

Published on

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ​​கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களிலும் இன்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபையால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டம், மாவனெல்ல, பேராதெனிய, கெலிஓயா, கம்பளை, உடபுஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, உலபனே, தென்னே கும்புர, குண்டசாலை, திகன மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அரிசி வர்த்தகர்களை தேடி 05 மேலதிக குழுக்களை ஈடுபடுத்தி சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக அந்த சபை தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...