follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

Published on

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

குறிப்பாக இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.

மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பிலும், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளுக்கான காணி உரித்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவின் கீழ் மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டத்தினை(வித்தியாவர்தன) வழங்கி எமது ஆசிரியர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் புலமையை அதிகரித்துக் கொள்வதற்காக உதவி வழங்கியைமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

அதேபோல் பெருந்தோட்ட பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களுக்காக, ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதற்கினங்க இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 3 பில்லியன் ரூபாய் நிதி உதவியிற்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை தற்போதைய அரசாங்கத்தினூடாக மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதிற்கு இனங்க கடந்த வருடம் எமது நாடு பொருளாதார நெருக்கடியில் காணப்பட்டபோதும், சமீபத்திய வளர்ச்சிக்காகவும், வழங்கிய ஆதரவிற்கும் இந்தியா அரசாங்கத்திற்கு நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்கள்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...