follow the truth

follow the truth

March, 22, 2025
HomeTOP1வரவு - செலவுத் திட்டம் 2025 (நேரலை)

வரவு – செலவுத் திட்டம் 2025 (நேரலை)

Published on

01:18 PM
ஜனாதிபதி வரவு செலவுத்திட்ட உரையை இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் நிகழ்த்தினார். பாராளுமன்றம் இன்று பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

01:17 PM
நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம், ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருப்போம். இந்த அழகிய புண்ணிய பூமியை நமது தாய்நாடு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

01:17 PM
இந்த நாட்டில் இன முரண்பாடுகள் இனி இல்லை.

மதம், இனம், பாலினம் என பிரிவடையும் காரணிகள் இல்லை

01:15 PM
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

01:14 PM
வேர் வரை ஊழல் ஒழிக்கப்படும்

01:14 PM
தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கே அதிகளவு தண்டனைகளை வழங்கியுள்ளார்.

01:13 PM
இலஞ்சம் வாங்குபவர்கள் அனைவரும் பயப்படும் சமூகத்தை உருவாக்குவோம்.

01:09 PM
இலங்கை நாணயம் மற்றும் நோட்டு இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது. ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு. தேவையில்லாமல் சொத்துக்களை குவிப்பவர்கள் இந்த முடிவுகளால் பாதிக்கப்படுவார்கள்.

01:08 PM
வரி செலுத்தும் மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் நாங்கள் நியாயம் செய்கிறோம்.
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

01:04 PM
வரி அறிவீடு தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்தப்படும்.

01:03 PM
அதிகாரிகளுக்கு தேவையான ஆதரவை நாட்டிற்கு வழங்குவோம்.

12:59 PM
தொழிலாளர்களின் தினக்கூலியை 1,700 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

12:54 PM
தனியார் துறையின் அடிப்படை ஊதிய உயர்வை ஏப்ரல் முதல் 27,000 ரூபாய் ஆகவும், அடுத்த ஜனவரி முதல் 30,000 ரூபாய் ஆகவும் அதிகரிக்க இணக்கம்.

12:53 PM
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர ஊதியத்தை ஏப்ரல் 2025 இல் ரூ. 21,000/- இலிருந்து ரூ. 27,000/- ஆகவும், 2026 முதல் ரூ. 30,000/- ஆகவும் உயர்த்தப்படும்.

12:53 PM
இந்த ஆண்டு சம்பள அதிகரிப்புக்கு 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

12:52 PM
பொதுத்துறையில் அடிப்படை சம்பளம் திருத்தம் செய்யப்பட்டு ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. அரச சேவையின் அடிப்படை சம்பளம் 40000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு படிப்படியாக வழங்கப்படும்.

12:51 PM
பொதுத் துறையில் முப்பதாயிரம் அத்தியாவசிய காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. அதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

12:51 PM
அரசியல் அடிப்படையில் எவரும் அரச சேவைக்கு நியமிக்கப்படுவதில்லை.

12:50 PM
பொது சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 10,000 மில்லியன் ரூபாய்
இந்த ஆண்டு முதல் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொது சேவைப் பணிகளில் 30,000 நபர்களை பணியமர்த்துவதற்கான ஒரு மூலோபாய ஆட்சேர்ப்புத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும்.

12:50 PM
கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக நூற்றெட்டு அலகுகள் கட்டப்படும். மிக விரைவில் கட்டப்படும்.

12:49 PM
சமுதாய குடிநீர் வழங்கல் மற்றும் புதிய நீர் வழங்கல் திட்டங்களுக்கு இரண்டாயிரம் மில்லியன் ரூபாய்

12:49 PM
பராமரிப்பு இல்லாத மாடி குடியிருப்புகளின் அத்தியாவசிய பராமரிப்புக்காக 1000 மில்லியன் ரூபாய்.

12:48 PM
பொது சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில், அரசியல் செல்வாக்கு இல்லாமல் இருக்கும்.

12:47 PM
தேசிய இலங்கை தின கொண்டாட்டங்களுக்கு 300 மில்லியன் ரூபாய்.

12:43 PM
குற்ற வருமானம் தொடர்பான சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
குற்ற வருமானம் மீதான சட்டங்களை மறுபரிசீலனை செய்து மீண்டும் அமலாக்கப்படும்.

12:41 PM
“இலங்கை தினம்” என்ற தேசிய விழாவை நடத்துவதற்கான திட்டங்கள். அதற்காக, ரூ. 300 மில்லியன் ஒதுக்கப்படும்.

12:37 PM
யானை-மனித மோதலை குறைக்க 300 மில்லியன் ரூபாய்
யானை – மனித மோதலுக்கு இழப்பீடு வழங்க 250 மில்லியன் ரூபாய்

12:37 PM
தூய்மையான இலங்கை திட்டத்துக்கு 5000 மில்லியன் ரூபாய்.

12:36 PM
கழிவு மேலாண்மை வசதிக்கு 750 மில்லியன் ரூபாய்.

12:36 PM
தூய்மையான இலங்கை திட்டத்தை அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்.

12:35 PM
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – ஜனாதிபதி

12:34 PM
அனைத்து மக்களும் இணைந்து மகிழும் வகையில் கலாசார விழா நடத்தப்படும்.

12:32 PM
கிழக்கு மாகாணம் பொருளாதார அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும்.

12:32 PM
பின்வரும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக 7,583 மில்லியன் ரூபாய் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது:

(i) தோட்டப்புற வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 4,267 ரூபாய் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

(ii) மலையகம் தமிழ் இளைஞர்களின் தொழிற்பயிற்சி, வாழ்வாதார மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2,450 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

(iii) மலையகம் தமிழ் சமூகத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 866 மில்லியன் ரூபா.

12:31 PM
வடக்கில் பாலம், வீதிகளை புனரமைப்பதற்கு 5000 மில்லியன் ரூபாய்.

12:31 PM
நாடளாவிய ரீதியில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 3000 மில்லியன் ரூபாய்.

12:30 PM
ஸ்ரீ லங்கா விமான நிறுவனத்தின் நீண்டகால கடனைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கன் நிறுவனத்தின் கடன் மற்றும் வட்டியை செலுத்த 2,0000 மில்லியன் ரூபாய்.

12:27 PM
வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைத்து மேம்படுத்துவதற்காக ரூ. 5,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

12:26 PM
கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்கும் 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வளர்ச்சியடையாத கிராமப்புற கிராமங்கள், சுற்றுலா தலங்கள், தொழில்துறை பேட்டைகள் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்/பகுதிகளை இணைக்கும் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

12:22 PM
அவிசாவளைக்கு அப்பால் ரயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

12:21 PM
ரயில் போக்குவரத்து நவீனமாக்கப்படும். ரயில்வேயை திறமையாக மாற்ற 500 மில்லியன் ரூபாய்.

12:20 PM
பொது போக்குவரத்து அமைப்பு அபிவிருத்து செய்யப்படும். நவீன வசதிகள் கொண்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். கொழும்பு நகரின் பிரதான வீதிகளுக்கு முதலில் 100 பஸ்கள் பயன்படுத்தப்படும். அதற்காக 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

12:19 PM
தண்டனை பெற்ற சிறைக்கைதிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம்.

12:18 PM
போதை இல்லாத சமூகம் வேலைத்திட்டத்து 500 மில்லியன் ரூபாய்.

12:17 PM
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்க 15000 மில்லியன் ரூபாய்.

12:17 PM
வெளிநாடு சென்று திரும்பும் இலங்கையர்களுக்கு விமான நிலையில் வரியில்லா வரம்பு உயர்த்தப்படும்.

12:16 PM
பண்டிகை உணவுப் பொதிக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

12:15 PM
பேரிடர் இழப்பீட்டுத் தொகை ஒரு மில்லியன் ரூபாய்.
பேரிடர்களால் சேதமடைந்த சொத்துகளுக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு.

12:14 PM
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.250,000 லிருந்து ரூ.1 மில்லியனாக உயர்த்தப்படும்.

12:14 PM
புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் செய்யப்படும்.

12:13 PM
இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்ட ஒரு மில்லியன் ரூபாய்.
தடுப்பு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 5,000.
அனாதைகளுக்கான சமூகப் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது.
நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 7,500-லிருந்து 10,000 உயர்த்தப்படும்.

12:11 PM
அங்கவீனமடைந்தோர் தொடர்பான விரிவான தரவு அமைப்பை உருவாக்க 100 மில்லியன் ரூபாய்.

12:10
இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டை நிர்மாணிக்க ஒரு மில்லியன் ரூபாய்.

12:09 PM
காப்பகங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை.

12:09 PM
ஆதரவற்ற குழந்தைகளுக்கான சமூகப் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
நன்னடத்தை பிரிவில் உள்ள சிறுவர் நலனுக்காக 500 மில்லியன் ரூபாய்.

12:08 PM
குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாகனங்கள் வாங்குவதற்கு ரூ. 250 மில்லியன் ஒதுக்கப்படும்.

12:07 PM
அஸ்வெசும சலுகைகளுக்காக ரூ. 232.5 மில்லியன் ஒதுக்கப்படும்.

12:04 PM
விவசாயம் சார் தீர்மானங்களை மேற்கொள்வதில் உதவுவதற்காக புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பு நிறுவப்படும்.

12:03 PM
சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த உதவித்தொகை 7500 முதல் 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதியோர் கொடுப்பனவு 3000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

12:01 PM
நன்னீர் மீன்பிடி தொழில் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாய்.

12:01 PM
இலங்கை இலவங்கப்பட்டை மற்றும் ஏனைய உற்பத்திகளுக்கு 250 மில்லியன் ரூபாய்.

12:00 PM
வடக்கு தெங்கு முக்கோண வலைய அபிவிருத்திப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாய்.

12:00 PM
தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உலக அளவில் தேங்காய் தேவை அதிகரித்து வருகிறது.

11:58 AM
நீர்ப்பாசனத் துறையின் அபிவிருத்திக்காக 78000 மில்லியன் ரூபாய்.
பழைய பாசன முறைகளை மேம்படுத்த 2000 மில்லியன் ரூபாய்.

11:57 AM
கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

11:57 AM
பால் உற்பத்தியை மேம்படுத்த 2500 மில்லியன் ரூபாய்.

11:56 AM
பயன்படுத்தப்படாத காணிகளை மீள் அபிவிருத்தி செய்யும் ஆரம்பப் பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய்.

11:55 AM
நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம்.
விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 500 மில்லியன் ரூபாய்.

11:54 AM
போதுமான நெல் கையிருப்பு நடைமுறைப்படுத்தப்படும்.
நெல் கொள்வனவுக்கு 5000 மில்லியன் ரூபாய்.
நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க 35000 மில்லியன் ரூபாய்.

11:54 AM
2025 ஆம் ஆண்டில் உர விநியோகத்திற்காக ரூ. 35,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

11:52 AM
திருகோணமலையில் அறுபத்தியொரு எண்ணெய் தாங்கிகள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

11:52 AM
குறைந்த கட்டணத்தின் அடிப்படையில் வலுசக்தி முதலீடுகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

11:49 AM
திருத்தப்பட்ட மின்சார சட்டம் விரைவில் முன்வைக்கப்படும்.

11:49 AM
யாழ்ப்பாண நூலகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 100 மில்லியன் ஒதுக்கப்படும். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டுக்காக ரூ. 200 மில்லியன் ஒதுக்கப்படும்.

11:48 AM
தேர்தல் காலத்தில் வாக்குகளுக்காக நூலகங்களுக்கு தீ வைக்கப்பட்ட காலம் வரலாற்றில் உண்டு. யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கும் அதுதான் நடந்தது.
யாழ். நூலகம், யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
யாழ். நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய். ஏனைய பிரதேசங்களில் நூலகங்களை அபிவிருத்தி செய்வதற்கு 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

11:46 AM
விளையாட்டு பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு ஐநூறு மில்லியன் ரூபாய்.
ஐந்து மாகாணங்களில் விளையாட்டுப் பாடசாலைகள் உருவாக்கப்படும்.

11:45 AM
அதிகரிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ஏப்ரல் 2025 முதல் வழங்கப்படும்.

11:44 AM
மஹபொல உதவித்தொகை 7500 ரூபாய் ஆக அதிகரிக்கப்படும்.

11:43 AM
தரம் 5 புலமைபரிசில் மாணவர்களுக்கான உதவித்தொகை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

11:42 AM
பெருந்தோட்ட மருத்துவமனைகளுக்கு மனிதவளம் மற்றும் மருந்துகளை அரசாங்கம் வழங்கும்

11:42 AM
முன்பள்ளி சிறுவர்களின் காலை உணவுக்காக செலவிடப்படும் பணம் 100 ரூபாய் வரை அதிகரிப்பு.
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

11:41 AM
பல்கலைக்கழக அமைப்பின் மேம்பாட்டிற்காக ரூ.135 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

11:41 AM
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

11:41 AM
பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

11:40 AM
மருந்து விநியோகத்திற்காக 185 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.

11:40 AM
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஐந்தாண்டு தேசிய திட்டம் செயல்படுத்தப்படும்.

11:39 AM
மீண்டும் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை

11:38 AM
சுகாதாரத்துக்காக 604 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

11:37 AM
தோட்ட வைத்தியசாலைகளுக்கான மனித வளங்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும்.

11:36 AM
கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கு 700 மில்லியன் ரூபாய்.

11:35 AM
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப மருத்துவ பிரிவுகள் நிறுவப்படும்.
சுகாதார சேவையை மேம்படுத்த டிஜிட்டல் மயமாக்கல் பயன்படுத்தப்படும்.

11:34 AM
பெண்கள் வலுவூட்டல் வேலைத்திட்டத்திற்கு 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

11:33 AM
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

11:32 AM
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு வாகனங்களோ அனுமதிப்பத்திரங்களோ இல்லை.

11:32 AM
இந்த ஆண்டு எம்.பி.க்களின் வாகனங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு வாகன அனுமதிகளும் கிடைக்காது.

11:28 AM
அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும்.

11:28 AM
புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கலுக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொது வளங்களை மக்கள் பாவனைக்கு திறம்பட பயன்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

11:25 AM
அபிவிருத்தி வங்கியொன்று ஆரம்பிக்கப்படும்.
தற்போதுள்ள அரச வங்கிகளின் கட்டமைப்பில் இருந்து அபிவிருத்தி வங்கி தொடங்கப்படும்.
அபிவிருத்தி கடன் திட்ட யோசனை முறைக்கு அரச வங்கிகள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

11:24 AM
அனுராதபுரம் மற்றும் யாபஹுவ போன்ற புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ. 500 மில்லியன் ஒதுக்கப்படும்.

11:24 AM
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை உருவாக்குவதே முதன்மை நோக்கமாகும்.

11:23 AM
பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும்.

11:22 AM
சுற்றுலாத் துறைக்கு டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் முறை தொடங்கப்படும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

11:22 AM
வருடாந்த தகவல் தொழில்நுட்ப வருவாயை ஐந்து பில்லியன் டொலராக உயர்த்த நடவடிக்கை.

11:21 AM
டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்த 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
டிஜிட்டல் பொருளாதாரம் தேசியப் பொருளாதாரத்தின் பன்னிரெண்டு சதவீத நிலையை எட்ட வேண்டும் என்பதே இலக்கு.

11:21 AM
பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒப்புதல்களுடன் ‘அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து’ என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

11:20 AM
பண நோட்டுகளின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்த வேண்டும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வலுப்படுத்துவோம்.
அதற்கு தேவையான சட்டங்கள் படிப்படியாக பலப்படுத்தப்படும்.

11:18 AM
தரவு பாதுகாப்பிற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்.

11:18 AM
உயர்மட்ட டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும்.

11:17 AM
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்கேனிங் சேவைகளை மேம்படுத்துவதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

11:17 AM
பிம்சவியா திட்டம் விரைவுபடுத்தப்படும்.

11:16 AM
அனைத்து பிரஜைகளுக்கும் இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள (டிஜிட்டல் அடையாள அட்டை) அமைப்பு மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

11:14 AM
உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக அரசுக்குச் சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்படும்.

11:13 AM
துறைமுக நெரிசலுக்கான நீண்ட கால தீர்வுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
துறைமுகத்தில் கொள்கலன் முகாமைத்துவத்தை வினைத்திறனாக்க ஐநூறு மில்லியன் ரூபாய்.
வெயங்கொடையில் உள்நாட்டில் கொள்கலன் முற்றம் நிறுவப்பட்டு வருகிறது.

11:12 AM
நாட்டுக்குள் தேசிய தரத்தை முகாமைத்துவ செய்ய முறைமையொன்று அவசியம். அதற்கு இந்த வருடத்திற்காக 750 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளோம்.

11:11 AM
பொது-தனியார் கூட்டாண்மை குறித்து ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

11:11 AM
பொருளாதார மாற்றச் சட்டம் திருத்தப்படும்.

11:10 AM
திவால் நிலை தொடர்பான சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படும்.
பொது – தனியார் கூட்டாண்மை தொடர்பான புதிய சட்டமூலம் முன்வைக்கப்படும்.

11:09 AM
வருமானம் மற்றும் இழப்புகளை நாட்டு்ககு திருப்பி அனுப்புவதை கண்காணிக்க பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும்.
பொது சேவையை டிஜிட்டல் மயமாக்கப்படும்.
நாட்டில் வணிகம் செய்வதற்கான வசதிகள் அதிகரிக்கப்படும்.

11:08 AM
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை.

11:08 AM
அரசாங்கத்துக்கு சொந்தமான நிலம் உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு விடப்படும்.
பொருளாதார மாற்ற சட்டம் திருத்தப்படும்.
இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் விரிவுபடுத்தப்படும்.

11:06 AM
புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கையின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த வலையமைப்பு விரிவாக்கப்படும்.

11:05 AM
உயர்தர, மலிவு விலையில் மூலப்பொருட்களை அணுகுவதற்கான தடைகளை அகற்ற, எளிமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வரி கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

11:05 AM
கல்வு, சுகாதாரத் துறைக்கு எப்போதுமில்லாதளவுக்கு உயர்ந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

11:03 AM
ஏற்றுமதியை விரிவுபடுத்துதல்.
தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது
நெருக்கடியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலை ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க பயன்படுகிறது.

11:02 AM
2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11:02 AM
ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது எமது முதல் படி
இந்த ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டெலர் ஏற்றுமதி வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

11:01 AM
2028ல் கடனை செலுத்தத் தொடங்கும் பொருளாதார சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். யாரும் பயப்பட வேண்டாம்.

11:01 AM
முந்தைய நிர்வாகம் வரையறுக்கப்பட்ட வரி வருவாயை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை நாங்கள் அறிவோம். வரையறுக்கப்பட்ட வரி நிதியை விவேகமாகவும் பொறுப்புடனும் நிர்வகிப்பதே எங்கள் நோக்கம்.

11:00 AM
தற்போது, ​​நாம் வெற்றிகரமாக ஒரு நிலைத்தன்மையை அடைந்துள்ளோம். இந்த வரவு செலவுத்திட்டத்தின் தொலைநோக்கு மக்களின் பொருளாதார உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதாகும்.

10:59 AM
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எங்களின் முக்கிய பகுதியாகும். பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம்.

10:58 AM
வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது

10:57 AM
போட்டி சந்தைக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஒரு விதிமுறையை உருவாக்கும் கருத்து செயல்படுத்தப்படுகிறது.

10:57 AM
ஊழல் மற்றும் வீண்விரயத்தைக் குறைப்பதன் மூலம் கூட்டு ஒழுக்கத்தின் புதிய பயணத்திற்கு வழிவகுக்கும் ஒரு அமைப்பை அமைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

10:57 AM
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. அவை நியாயமான விலையில் வழங்கப்படுகின்றன.
அத்துடன், தரமான தயாரிப்புகள் கொடுக்கப்படுகின்றன.

10:56 AM
உற்பத்தியின் பலன்கள் சமுதாயம் முழுவதும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்.
மக்களின் சுறுசுறுப்பான பங்கேற்புடன் செய்யப்பட வேண்டும், மக்களை தனிமைப்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அர்த்தமில்லை.
தொழில் மற்றும் சேவை விவசாயத்தில் உற்பத்தியை அதிகரித்தல்.
உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

10:56 AM
அனைத்து மக்களும் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கு வகிக்கின்றனர்.

10:55 AM
ஒவ்வொரு ரூபாயும் பொருளாதார மற்றும் சமூக நலன்களைப் பெறக்கூடிய வகையில் செலவிடப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீதம் மூலதனச் செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

10:54 AM
ஜூலை முதல் மூத்த குடிமக்கள் வட்டி மானியத்துக்கு பணம் ஒதுக்கப்பட்டது.
நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ளோம்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முன்னுரிமை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

10:54 AM
வரிப்பணத்தை வரையறுக்கப்பட்ட முன்னுரிமை அடிப்படையில் செலவிடுவதை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

10:53 AM
வரம்புக்குட்பட்ட வரிப் பணத்தை முன்னாள் ஆட்சியாளர்கள் எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பது நமக்குத் தெரியும்.
வரையறுக்கப்பட்ட வரி நிதிகளை கவனமாக நிர்வகிக்க உத்தேசித்துள்ளோம்.

10:53 AM
முன்னுரிமை அடிப்படையொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட வரிப்பணத்தை செலவு செய்வதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

10:52 AM
மக்களின் பொருளாதார உரிமைகளை உறுதி செய்வதே இந்த வரவு செலவுத்திட்டத்தின் நோக்கம்.

10:51 AM
சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கையையும் உயர்த்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த பகுதி ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கைகளில் குவிந்துள்ளது.
பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை.

10:50 AM
பொருளாதார வளர்ச்சியை 2025ஆம் ஆண்டு 5 சதவீதத்தில் பேணுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

10:48 AM
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கெதிரான பல்வேறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை அரசாங்கத்தால் ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான ரூபாவை பலப்படுத்தியதுடன், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம்.

10:48 AM
மக்களின் சம்பளம் குறைந்துள்ளதால் நியாயமான சம்பள உயர்வு வழங்க வேண்டும். குடிமக்களைப் பராமரிப்பது மனிதாபிமான அரசாங்கத்தின் பொறுப்பு.

10:47 AM
அடிமட்டத்தில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை.
பொருட்களின் விலை அதிகரித்துள்ள அளவுக்கு வருமானம் அதிகரிக்கவில்லை.

10:46 AM
நாம் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைத்து பொருளாதார இறையாண்மைக்கு நெருக்கமாக செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

10:45 AM
சமூக பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் இந்த வரவு செலவுத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும், வலுவான சர்வதேச உறவுகளை உருவாக்குவதிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
அந்நிய செலாவணி கையிருப்பு 06 பில்லியன் டொலர் மற்றும் பத்தில் ஒரு பங்கு என்ற அளவில் பராமரிக்க முடிந்தது.

10:44 AM
முன்னைய சிதைக்கப்பட்ட ஆட்சி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை
உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், ஜனநாயகத்தின் இலட்சியமும் உடைந்தது.

10:40 AM
ஊழல் நிறைந்த ஆட்சி, தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகமே நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
அந்த காரணங்களாலேயே மக்கள் வரிசையில் நின்று இறக்க நேரிட்டனர் – ஜனாதிபதி
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏழை மக்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

10:35 AM
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்துள்ளார்.

10:28 AM
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்துக்கு வருகை

10:07 AM
2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்த...

மாத்தறை துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்றிரவு (21)...

பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் எனக்கு வேண்டாம்

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...